வாக்காளர் பெயர் பட்டியலில் தமது பெயர்களை உள்ளடக்காத பல பிரிவுகளைச்
சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த
தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது...
'பின்தங்கிய பகுதியில் வாழும் மக்கள், நகர்ப்பகுதிகளில் வாழ்ந்து அதிக
வருமானத்தை ஈட்டுபவர்கள், தனிமையில் வாழ்பவர்கள் என பலர் இன்னும் வாக்காளர்
பட்டியலில் உள்ளடக்கப்படாத நிலையில் உள்ளனர். இவர்களை வாக்காளர்
பட்டியலில் உள்ளடக்க எதிர்பார்த்துள்ளோம்.
இதேவேளை, யுத்தம் காரணமாக வடபகுதிக்குள் இடம்பெயர்ந்த மக்களையும் இதில் உள்ளடக்க எதிர்பார்த்துள்ளோம்.
ஆனால் இன்னும் வடமாகாணசபைத் தேர்தல் குறித்து எனக்கு உத்தியோகபூர்வ
அறிவித்தல் எதுவும் வழங்கப்படவில்லை,' என்றார் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த
தேசப்பிரிய.
0 comments:
Post a Comment