ஊடக ஒழுக்கக்கோவையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலமொன்றை கொண்டுவர
அரசாங்கம் மேற்கொள்ளும் பிரயத்தனத்திற்கே 'தி ஐலண்ட்' பத்திரிகையின்
நேற்றைய ஆசிரியர் தலையங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களை நிர்வகிப்பதற்காக மடிக்கணனி மற்றும் பிரம்புகளின்
பிரவேசத்துடன் அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கான ஒழுக்கக்கோவை ஒன்றை திடீரென
அறிமுகப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சி தொடர்பில் அதில்
விளக்கப்பட்டுள்ளது.
மடிக்கணனி தந்திரோபாயத்தால் உத்தேச பெறுபேறு கிடைக்காமையால் ஒழுக்கக்
கோவையெனும் பிரம்பைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதா என
'தி ஐலண்ட்' பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் கேள்வி
எழுப்பப்பட்டுள்ளது.
ஊடக ஒழுக்கங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையிலான தொடர்பு குறித்தும் ஆசிரியர் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள்
விடுதலை முன்னணியின் ஒரு சில அரசியல்வாதிகளின் கைகளிலிருந்து
ஊடகவியலாளர்களின் குருதி வடிந்தோடுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில தசாப்தங்களாக பல ஊடகவியலாளர்கள் கொடூரமான முறையில் படுகொலை
செய்யப்பட்டுள்ளதையும் 'தி ஐலண்ட்' பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்
சுட்டிக்காட்டியுள்ளது.
ஒழுக்கம் தொடர்பில் கதைக்கும் அரசியல்வாதிகளுக்கும் கற்பு தொடர்பில்
கதைக்கும் விலை மாதுக்களுக்கும் இடையே எவ்வித வேறுபாடும் இல்லை என 'தி
ஐலண்ட்' பத்திரிகையின் ஆசிரியர் அதில் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment