காவிரி நீர் பங்கீடு குறித்து
விவாதிப்பதற்காக நடைபெற்ற கர்நாடக மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் சித்தராமையா தலைமையில்
நடைபெற்ற இந்த கூட்டத்தில், 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கக்
கோரி தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை எதிர்கொள்வது குறித்து
விவாதிக்கப்பட்டது.
2007ஆம் ஆண்டு நடுவர் மன்ற
தீர்ப்பின்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரை 134 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு
வழங்க வேண்டும், ஆனால் தற்போது போதிய நீர் இருப்பு இல்லாததால், பருவமழை
சரியாக பெய்து நீர் இருப்பு அதிகரிக்கும் பட்சத்தில் 97.82 டிஎம்சி நீரை
தமிழகத்துக்கு திறந்துவிட முடியும் என்று கர்நாடக முதலமைச்சர்
தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீர் பங்கீட்டு
விகிதத்தை மறு ஆய்வு செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டிருப்பதால், மறு ஆய்வு
செய்வதற்கு வரும் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் காவிரி தற்காலிக
கண்காணிப்புக் குழுக்கூட்டத்தில் முறையிடப்போவதாகவும் சித்தராமையா
தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கண்காணிப்பு குழுவின்
செயல்பாட்டில் சில முரண்பாடுகள் உள்ளதாக அந்த மாநிலத்தின் முன்னாள்
அமைச்சர் பசவராஜ் பொம்மை குற்றம் சாட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment