இரணைமடுவில் இலங்கை விமானப்படையினரால்
புனரமைக்கப்பட்ட விமான ஓடுதளம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று
(15ஆம் திகதி) சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
இலங்கை விமான படை வரலாற்றில் முதன்முறையாக விமான படையினரின் சக்தியை பயன்படுத்தி சர்வதேச தரத்திற்கு அமைவாக இந்த ஓடுதளம் நிர்மாணிக்க்பட்டுள்ளது என்று விமானப்படை அறிவித்துள்ளது.
ஓடுதளம் 1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலத்தையும் கொண்டிருக்கின்றது. இதற்கான திட்டம், பொறியியல், நிரமாணம் உபகரங்கள் மற்றும் தொழில்நுட்பம் என்பன விமான படையினருடையது என்று இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது
.அதேபோல இலங்கை விமானப்படையிடம் இருக்கின்ற மிக பெரிய விமானமான சீ-130 விமானத்தையும் இந்த ஓடுதளத்தில் ஏற்றியிறக்க கூடியவகையில் நிரமாணிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, இரணைமடு ஓடு தளத்திற்கு இரண்டு வழிகளில் வருகை தரலாம் என்றும் விமானப்படை அறிவித்துள்ளது.மாங்குளம், அம்பாகாமம் ஓலுமடு ஊடாக வருகைதரலாம். அப்படியின்றேல், கிளிநொச்சி,வடக்கச்சி, ராமநாதபுரம் மற்றும் கல்மடுவூடாக வருகைதரலாம்.
இலங்கை விமானப்படை வரலாற்றில் வரலாறு படைத்துள்ள இந்த இரணை மடு ஓடுதளத்துடன் மன்னார், வவுனியா,பலாலி உட்பட வடக்கில் நான்கு ஓடுதளங்கள் இருக்கின்றன.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி நவீன முறையில் புனரமைக்கப்பட்ட ஏ9 வீதியை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.இதனிடையே கிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மக்கள் வங்கி கிளையையும் ஜனாதிபதி திறந்து வைப்பார்.
0 comments:
Post a Comment