Home » , » ஜெனரலாக ஜகத் ஜயசூரிய பதவி உயர்வு!

ஜெனரலாக ஜகத் ஜயசூரிய பதவி உயர்வு!

Written By EGK NEWS on Friday, June 14, 2013 | 6:46 PM

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ‘ஜெனரல்’ ஆக பதவி உயர்த்தப் பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அவருக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பதவி உயர்வானது இம்மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

வடக்கில் இடம்பெற்ற இறுதிக் கட்ட போரின் போது வன்னி கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ஜகத் ஜயசூரிய- 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.

இவர்- வன்னி கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய காலப்பகுதியில் அவரின் மேற்பார்வையின் கீழ் மூன்று படைப் பிரிவுகள் இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டன.

இலங்கை இராணுவ வரலாற்றில் மிகப் பெரிய இராணுவ படைப் பிரிவுகளை கையாண்ட இராணுவ அதிகாரி என்ற பெயரை ஜகத் ஜெயசூரிய தக்கவைத்துக் கொண்டார்.

ஜெனரல் ஜகத் ஜயசூரிய- 1977 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார்.

புலிகள் இயக்கத்துக் கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையிலான 30 வருட யுத்தத் தின் போது அவர் இராணுவ சேவையில் பெரும் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE