ஜூலை 15ஆம் திகதி முதல் ஜூலை 21ஆம் திகதி
வரையான காலப் பகுதியில் சமூக ஒருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கையை தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு
எடுத்துள்ளது.
சமூக ஒருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பது தொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயகார முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் சமூகங்களுக் கிடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவது மற்றும் ஒருமைப்பாட்டுக்கான விழிப் புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சமூக ஒருமைப்பாட்டு வாரத்தின் கீழ் இந்த செயற்திட்டங்களை முன்னெடுக்க தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தும் பல்வேறு வேலைத் திட்டங்களை அமைச்சு முன்னெடுத்து வருகின்றமை குறி ப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment