Wednesday, June 19, 2013

அமெரிக்காவுடன் நடத்தவிருந்த பேச்சுக்களை ரத்து செய்தார் ஆப்கான் அதிபர் - தலிபான்களுடன் பேச்சு நடத்த முயன்றதால் ஆத்திரம்!

அமெரிக்காவுடன் நடைபெறவிருந்த பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் ரத்து செய்தார். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் 2014-ஆம் ஆண்டு முழுமையாக வெளியேறுகின்றன. இருப்பினும் அமெரிக்கப் படைகள் மேலும் சில காலம் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்க வகை செய்யும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருந்தன.
  
இந்நிலையில் தலிபான்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா திடீரென முடிவு செய்தது. தலிபான்களால் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வரும் ஆப்கானிஸ்தான் அரசு, அமெரிக்கா தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விரும்பவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அமெரிக்கா அவசரம் காட்டுவது சரியல்ல. அமெரிக்காவின் சொல்லும் செயலும் மாறுபட்டு இருப்பதாக ஹமீத் கர்சாய் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment