Wednesday, June 19, 2013

பொதுநலவாய மாநாட்டு ஒழுங்குகளை கவனிக்க 15 உப குழுக்கள் நியமனம்!

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையில் நவம்பர் மாதத்தில் நடைபெற விருப்பதனால் அதற்கான முன்னேற்பாடுகளை அரசாங்கம் இப்போது துரித வேகத்தில் ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பான பொதுநலவாய அமைப்பின் இணையதளம் சமீபத்தில் வெளிவிவகார அமைச்சில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 22 வருடங்களுக்குப் பின்னர் ஆசிய நாடொன்றில் நடை பெறவுள்ள முதலாவது பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு என்பதனால் அதற்கான சகல ஒழுங்குகளையும் சீராக செய்து முடிப்பதற்கு அரசாங்கம் 15 உப குழுக்களை நியமித்துள்ளது.

வர்த்தம்- வணிகத் துறை தொடர்பான குழுவுக்கு பிரதி வெளிவிவகார அமைச்சர் நியுமல் பெரேரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் தொடர்பான உப குழுவுக்கு அமைச்சர் டலஸ் அலகப்பெரும தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் செயற்பாடுகள் தொடர்பான உபகுழுவிற்கு டாக்டர் சந்திரதாஸ நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த வாரத்தில் இந்தக் குழுக்கள் தங்கள் பணிகளை ஆரம்பிக்க உள்ளன.

No comments:

Post a Comment