Wednesday, June 19, 2013

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நீதி நேர்மையுடன் நடத்தப்படும்- அரசாங்கம் நேற்று அறிவிப்பு!

வடக்கு மாகாண சபைத் தேர்தல் மிகவும் நீதியாகவும் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்படுமென அரசாங்கம் நேற்று உறுதியளித்தது.

“உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் எவ்வகையான கருத்துக்களை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முனைந்தாலும் 30 வருட யுத்தத்தின் பின்னர் வடக்கில் சமாதானத்தை ஏற்படுத்தி மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு வழி ஏற்பட்டுள்ளமை இலங்கைக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்” என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கில் தேர்தல் நடத்தி அந்தப் பகுதி மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டுமென நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் கேட்கப்பட்டு ள்ளது. இதனை நிறைவேற்றும் வகையிலும் வட மாகாண சபைத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்படுமெனவும் அரசாங்கம் தெரிவித்தது.

ஸ்ரீல. சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு டார்லி வீதியிலுள்ள அதன் புதுப்பிக்கப்பட்ட தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன- நிமல் சிறிபால டி சில்வா- டலஸ் அழகப்பெரும- அனுரபிரிய தர்ஷன யாப்பா ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர். இதன்போதே மேற்கண்டவாறு அமைச்சர்கள் கூறினர்.

வடக்கில் மட்டுமல்ல வடமேல்- மற்றும் மத்திய மாகாணத்திலும் நடத்தப்படும் தேர்தல்கள் சுதந்திரமானதும்- நேர்மையானதும்- பக்கச்சார்பற்றதுமாக நடத்தப்படும் என்பதை அரசு உறுதி வழங்க வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வடக்கு தேர்தலில் அனைத்து கட்சிகளும் போட்டியிட வேண்டும் என்பதும்- ஜனநாயகத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதுமே ஜனாதிபதியின் நோக்கம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கருத்துத் தெரிவிக்கையில்-

வடக்கில் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு அப்பகுதியின் நிர்வாகத்தை புலிகளிடமே ஒப்படைக்கும் விதத்தில் ஐ. தே. க. தலைவர் அன்று ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருந்தார். அங்குள்ள மக்களின் ஜனநாயகம் பறிக்கப்பட்ட நிலையிலும் புலிகள் எவராலும் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்பதாலும் அவர்களுக்கே அந்தப் பகுதியை கொடுத்து விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் அனைவரிடமும் ஏற்பட்டது. இதற்கமைய ஐ. தே. க. தலைவர் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார்.

ஆனால் அனைத்தையும் உடைத்தெறிந்து பிரபாகரனினால் பறித்தெடுக்கப்பட்ட சுதந்திரம் இன்று அந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அதனை பெற்றுக் கொடுத்துள்ளார். அதேபோன்று இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

வடக்கு- மத்திய- வட மேல் மாகாண சபை தேர்தல்கள் செப்டம்பர் மாதம் நடத்தப்படும். தேர்தலை நடத்துவதற்கான கோரிக்கையை அரசாங்கம் தேர்தல் திணைக்களத்திடம் அடுத்த மாதம் கோரவுள்ளது.

நடைபெறவுள்ள தேர்தலில் போட்டி யிடும் ஏனைய கட்சி வேட்பாளர்களுடன் எந்த வித பிரச்சினைகளும் செய்து கொள்ளாமல் நியாயமான முறையில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவதே அரசின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களின் நடவடிக்கைகளை ஜனாதிபதி உன்னிப்பாக அவதானித்து வருவதற்கும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

இத் தேர்தல்கள் ஒழுங்கான முறையில் நீதியான முறையில் சுதந்திரமாக நடத் தப்படும். முறைகேடாக நடத்தப்படுவதில் ஸ்ரீல. சு.கட்சிக்கோ- அரசுக்கோ எவ்வித இலாபமும் கிடைக்கப்போவதில்லை என்றும் அமைச்சர் மைத்திரிபால தெரிவித்தார்.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உரையாற்றுகையில்;;;;-

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற் காக வடக்கில் தேர்தலை நடத்தி அந்த மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துறை யில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அரசு அதனை நடைமுறைப் படுத்துகிறது. இதன் ஊடாக சர்வதேசத்துக்கு அரசின் செயற்பாட்டை எடுத்துக் காட்ட முடிந்துள்ளது.

நடக்கவிருக்கும் தேர்தல் முடிவுகள் பற்றி எமக்கு பிரச்சினையில்லை. தேர் தலை வெற்றிகரமாக நடத்துகிறோம் என்பதே முக்கியம்- யார் வெற்றி பெறு கிறார்கள் என்பது எமக்கு தேவையில்லை என்றும் கூறினார். அமைச்சர் டலஸ் அழகப்பெரும- அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment