Home » » வழக்கை வாபஸ் பெற்றால் ஒரு வாரத்தில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும்: நாமல்

வழக்கை வாபஸ் பெற்றால் ஒரு வாரத்தில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும்: நாமல்

Written By EGK NEWS on Sunday, June 2, 2013 | 9:04 AM

அரசியல் பேசுவது எனது நோக்கம் அல்ல எனத் தெரிவித்த அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரும் நாளைய இளைஞர் அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ, பட்டதாரிகளுக்கான நியமனம் தொடர்பில் நன்கு ஆராய்ந்து நியமனம் வழங்கப்படும் எனவும் கூறினார். நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

  
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"பட்டதாரிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கின்றார்கள். முன்னைய அரசாங்கம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கு சற்றுப் பின்வாங்கி விட்டது. ஆனால், தற்போதைய அரசாங்கம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. வடமாகாணத்தில் 51 ஆயிரம் பட்டதாரிகள் இருக்கின்றனர். அவர்களில் 6,000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பட்டதாரிகளின் பிரச்சினைகள் யாழ். மாவட்டத்தில் மட்டும் இருப்பது அல்ல. இலங்கை முழுவதிலும் இருக்கின்றது. பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அந்த அழுத்தங்களின் ஊடாக விரைவில் நியமனங்களை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். உயர் தொழில்நுட்பக் கல்லூரிப் பட்டதாரிகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிறைவுற்ற பின்னர் அல்லது பட்டதாரிகள் வாபஸ் பெற்றால் ஒரு வாரத்தில் நியமனம் வழங்கப்படும்" என்றார்.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE