Home » , » கல்வியற்கல்லூரி தெரிவில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு அனுமதி கிடைக்க ஆவன செய்யுங்கள்!- கல்வியமைச்சருக்கு சிறீதரன் எம்.பி கடிதம்

கல்வியற்கல்லூரி தெரிவில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு அனுமதி கிடைக்க ஆவன செய்யுங்கள்!- கல்வியமைச்சருக்கு சிறீதரன் எம்.பி கடிதம்

Written By EGK NEWS on Wednesday, June 12, 2013 | 6:41 AM

கல்வியற் கல்லூரிகளுக்கான அனுமதியின் வடபகுதி மாணவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கல்வியமைச்சர் பந்துல குணவர்ததனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கடந்த 10ம் திகதி எழுதப்பட்ட அந்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன. இவ்வாண்டு கல்வியியல் கல்லூரிகளுக்கான அனுமதி கோரப்பட்டு தற்பொழுது நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதில் ஆரம்பக்கல்வி, வர்த்தகமும் கணக்கியலும் பாடங்களுக்கு க.பொ.த சாதாரண பரீட்சையில் ஆங்கிலம், தமிழ், கணித பாடங்களில் திறமைச் சித்தி கேட்கப்பட்டுள்ளது.
கணித பாடத்தில் சாதாரண சித்தி பெற்ற ஒருவர் ஆங்கில பாடத்தில் சித்தி பெறாவிட்டாலும் பல்கலைக்கழக அனுமதியினைப் பெறக் கூடியதாக உள்ளது.
ஆனால் கல்வியியல் கல்லூரி அனுமதிக்கு மட்டும் கணிதம் ஆங்கிலத்தில் திறமைச் சித்தி கேட்பது அதிலும் மிகவும் பற்றாக்குறையாக உள்ள ஆரம்பக் கல்விக்கு ஆங்கில பாட திறமைச் சித்தி கேட்பது எவ்வளவு நியாயமானது?
இதிலும் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 362 ஆங்கில பாட ஆசிரியர்களுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 125 ஆங்கில பாட ஆசிரியர்களுக்கும் முல்லைத்தீவில் 140 ஆங்கில பாட ஆசிரியர்களுக்கும் மன்னாரில் 78 ஆங்கில பாட ஆசிரியர்களுக்கும் வவுனியாவில் 165 ஆங்கில பாட ஆசிரியர்களுக்குமாக மொத்தம் 870 ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ள நிலையில் தமிழ் மாணவர்களிடம் ஆங்கிலம் கணிதத்தில் திறமைச் சித்தியைக் கட்டாயமாக்குவது பாதகமானது.
குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மடு, துணுக்காய், தீவக வலயங்களும், வட மராட்சி வடக்குக் கோட்டமும் ஆங்கில, கணித பாட ஆசிரியர்களின் பற்றாக்குறையினை பாரியளவில் சந்தித்துள்ள இடங்களாகும்.
எனவே தாங்கள் கூடிய கவனம் செலுத்தி க.பொ.த உயர்தர சித்தி பெற்ற பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் போக கல்வியியல் கல்லூரிக்குத் தெரிவான மாணவர்களுக்கு கணிதம், ஆங்கிலத்தில் திறமைச் சித்தியைக் கட்டாயமாக்காமல் அனுமதி கிடைக்க ஆவன செய்யுமாறு ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன்.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE