Home » , » மட்டு. நுழைவாயிலில் புத்தர் சிலை நிறுவும் விவகாரம்!- மனித உரிமை ஆணைக்குழுவிடம் தேரர் முறைப்பாடு

மட்டு. நுழைவாயிலில் புத்தர் சிலை நிறுவும் விவகாரம்!- மனித உரிமை ஆணைக்குழுவிடம் தேரர் முறைப்பாடு

Written By EGK NEWS on Wednesday, June 12, 2013 | 6:31 AM

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பிள்ளையாரடி சந்தியில் புத்தர் சிலை நிர்மாணிக்கும் விவகாரத்தை மட்டு. மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
நேற்று குறித்த விடயம் தொடர்பாக எழுத்து மூலமான முறைப்பாடொன்றை விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர், தன்னிடம் கையளித்துள்ளதாக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இ.மனோகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 29ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பிரதேச மக்களும் இணைந்து புத்தர் சிலை நிறுவுவதற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, இதற்கான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, இவ்விவகாரம் பொலிஸாரினால் நீதிமன்றின் கொண்டுவரப்பட்டது.
குறித்த இடத்தில் புத்தர் சிலை நிறுவுவது பொதுத் தொல்லையையும் சமூக அமைதிக்குப் பங்கத்தையும் ஏற்படுத்தும் என பொலிஸார் தமது அறிக்கையில் குறிப்பிட்டதன்பேரில் புத்தர் சிலை வைப்பதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE