Home » , » திறந்த பல்கலைகக்கழக சட்டபீடத்தின் தலைவிக்கு கத்திக்குத்து!

திறந்த பல்கலைகக்கழக சட்டபீடத்தின் தலைவிக்கு கத்திக்குத்து!

Written By EGK NEWS on Wednesday, June 19, 2013 | 8:04 PM

நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவமொன்றில் பல்கலைக்கழக சட்டபீடத் தலைவி யசோதரா கதிர்காமத்தம்பி பலத்த காயங்களுக்குள்ளாகி சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று நண்பகல் பல்கலைக்கழகத்தின் சட்டபீடப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. சட்டபீடத்தில் கற்கும் மாணவரான சிவஞான சுந்தரம் சுரேந்திர ஜித் என்பவரே சட்டபீடத் தலைவியைக் கத்தியால் குத்தி பலத்த காயங்களுக்குட்படுத்தியதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் இவரைப் பின்னர் கைது செய்துள்ளனர்.

பல்கலைக்கழக சட்டபீடத் தலைவியை கத்தியால் குத்திய மாணவன் அவ்விடத்தில் வைத்தே ஏதோ ஒரு மருந்தொன்றை உட்கொண்டுள்ளான். இதனையடுத்து கைது செய்யப்பட்ட இவர் பொலிஸாரின் பாதுகாப்புடன் களுபோவிலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலி ஸார் தெரிவித்தனர்.

கத்திக்குத்துக்கு இலக்கான யசோதரா கதிர்காமத்தம்பி தொடர்ந்தும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் அவருக்கு எந்தவித உயிராபத்தும் இல்லையென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மாணவர் குறித்த நாளில் தமக்கான ஒப்படை அறிக் கையை சமர்ப்பிக்கத் தவறியுள்ளார். காலங்கடந்த தமது ஒப்படை அறிக் கையை பொறுப்பேற்குமாறு சட்டபீடத் தலைவியான யசோதரா கதிர்காமத் தம்பியிடம் பலவந்தப்படுத்தியதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE