Home » , » மீனவர் களுக்கு கட்டாயக் காப்புறுதி ஜனவரி முதல் அமுல்!

மீனவர் களுக்கு கட்டாயக் காப்புறுதி ஜனவரி முதல் அமுல்!

Written By EGK NEWS on Friday, June 14, 2013 | 6:44 PM

கடற்றொழிலாளர்களுக்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காப்புறுதி திட்டத்தின் கீழ் காப்புறுதி செய்துகொள்ளாத மீனவர்கள் எவரும் ஜனவரி முதல் கடற்றொழிலுக்கு செல்ல முடியாது என்ற நடைமுறை அமுல்படுத்தப் படும் என அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

அத்துடன் அனர்த்தங்கள் குறித்து மீனவர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கவும் ஏனைய நாடுகளின் கடல் பரப்பினுள் நுழைவதை தடுக்கவும் ஜனவரி முதலாம் திகதி முதல் ‘படகுகள் கண்காணிப்பு செயல்முறை ஒன்றும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.

காலநிலை முன்னெச்சரிக்கை விடும் முறையிலுள்ள தொழில்நுட்ப தவறினாலே மீனவர்கள் பலர் பலியாகினர். காலநிலை அவதான நிலையத்தின் தவறல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மீனவர்களுக்கு 10 ஆயிரம் பாதுகாப்பு அங்கிகள் வழங்கப் பட்டுள்ள போதும் அவர்கள் அவற்றை பயன்படுத்துவதில் அக்கறை கட்டாதிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடும் காற்றினால் பல மீனவர்கள் இறந்தது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இவ்வாறான அனர்த்தங்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுக்க மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து விளக்கமளித்த அமைச்சர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

மேலும் இரு மீனவர்களின் சடலங்கள் நேற்று கண்டுபிடிக் கப்பட்ட நிலையில் அனர்த்தத்தினால் இறந்தோர் தொகை 51 ஆக உயர்ந்துள்ளது. 8 பேர் காணாமல் போயுள்ளனர். முற்றாக அழிந்த மற்றும் காணாமல் போன படகுகளின் தொகை 84 ஆகும். 76 படகுகள் போதியளவு சேதமடைந்துள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

மீனவர்களுக்கான காப்புறுதி திட்டத்தில் குறைந்தளவு மீனவர்களே இணைந்துள்ளனர். இறந்த 51 மீனவர்களில் 4 பேர் மட்டுமே காப்புறுதி செய்துள்ளனர். வருடாந்தம் 750 ரூபா மட்டுமே மீனவரிடம் அறவிடப்படுகிறது. காப்புறுதி செய்யாத மீனவர்களின் குடும்பங்களுக்கும் இம்முறை ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்கப்படும் என்றார்.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE