மாத்தளையிலுள்ள பிரபல மகளிர் கல்லூரியொன்றின் மாணவிகள்
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் உடனடி
விசாரணைகளை நடத்துவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
தீர்மானித்துள்ளது.
மாத்தளை மாவட்டத்திலுள்ளள சிறுவர் பாதுகாப்பு
அதிகாரிகள் இந்த விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அதிகார சபையின் தலைவர்
சட்டத்தரணி அனோமாத திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தளையிலுள்ள பாடசாலை மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவலை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்கள் மாணவர்களை தவறான முறையில் வழிநடத்தினால் அதற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கான பாதுகாப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக கல்வி அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
மாத்தளையிலுள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றின் மாணவிகளை ஆசிரியைகள் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின்போது நேற்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

0 comments:
Post a Comment