Home » , » பரிச‌ோதனையில் பெண்ணாக மாறிய ஆண்

பரிச‌ோதனையில் பெண்ணாக மாறிய ஆண்

Written By EGK NEWS on Wednesday, June 5, 2013 | 6:53 PM

வயிற்றில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக டாக்டரிடம் பரிசோதனைக்கு சென்ற ஆணை, டாக்டர்கள் பெண் என்று அறிவித்த சம்பவம் ஹாங்காங்கில் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக, ஹாங்காங்கிலிருந்து வெளிவரும் மெடிக்கல் ஜர்னலில் வெளிவந்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 66 வயது நிரம்பிய ஆண், வயிற்றில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக, ஹாங்காங்கில் உள்ள மருத்துவமனைக்கு சிகி‌ச்சைக்கு சென்றார். டாக்டர்கள் பரிசோதித்ததில், அவரிடம் பெண்ணுக்குரிய கர்‌ப்பப்பை இருந்ததாகவும், அதில் ஏற்பட்ட கட்டியே, வீக்கத்திற்கு காரணம் என டாக்டர்கள் கூறினர். ஹாங்காங்கில் உள்ள குவாங் வா மருத்துவமனை மற்றும் குயின் எலிசபெத் மருத்துவமனை டாக்டர்களும் இதனை உறுதி செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE