ஆசிரியையை விளையாட்டு மைதானத்தில் முழங்காலில்
நிறுத்தி வைத்தமை வெறுக்கத்தக்க செயல் என இலங்கை சுதந்திரக் கட்சியின்
செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது
தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, மாகாண சபை உறுப்பினர் செய்தது
கடுமையான குற்றம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த உறுப்பினர்
தொடர்பில் இலங்கை சுதந்திரக் கட்சி விசேட தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவுக்கு எதிராக மேலதிக
ஒழுக்காற்று ஒழுக்காற்று களை மேற்கொள்ள அமைச்சரின் கையெழுத்துடன் அறிக்கை
வெளியிடப்பட்டுள்ளது.
Home »
உள் நாட்டு செய்தி
,
செய்திகள்
» ஆசிரியையை முழங்காலிட வைத்த மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கை - மைத்திரிபால
0 comments:
Post a Comment