Home » , » நைல் நதியின் மீது தொடரும் சர்ச்சை : அணைகட்டுவது உறுதி என்கிறார் எத்தியோப்பிய பிரமர்

நைல் நதியின் மீது தொடரும் சர்ச்சை : அணைகட்டுவது உறுதி என்கிறார் எத்தியோப்பிய பிரமர்

Written By EGK NEWS on Friday, June 14, 2013 | 6:27 PM

நைல் நதியின் குறுக்காக அணைகட்டும் திட்டத்தினை யாரும் தடுக்க முடியாது என எகிப்தின் பிரதமர் ஹெய்லிமரியம் தெரிவித்துள்ளார்.

உலகின் மிக நீளமான நைதியின் குறுக்காக எத்தியோப்பியா அணை ஒன்றினை கட்டுவதற் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையால் சூடானும் எகிப்தும் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நிலையிலேயே எத்தியோப்பியா பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நைல் நதியானது வெள்ளை மற்றும் நீல நைல் நதிகள் என இரு வகை உண்டு. இதில் நீல நைல் நதியின் குறுக்காவே சீனா மற்றும் இத்தாலி அரசுகளின் உதவியுடன் இலங்கை மதிப்பில் சுமார் 56 ஆயிரம் கோடி ரூபா செலவின் அணையை ஒன்றைக் கட்டும் நடவடிக்கைகளை எத்தியோப்பியா ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்திற்காக நைல் நதியின் நீர் ஓட்டத்தை எத்தியோப்பியா திசை திருப்பி உள்ளது. இதனால் எகிப்தும், சூடானும் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் சுயஸ் கால்வாயை மூடி, போக்குவரத்து தடையை ஏற்படுத்த எகிப்து திட்டமிட்டுள்ளது.

எனவே இச்சர்ச்சைக்குரிய திட்டம் குறித்து எகிப்து மற்றும் சூடான் நாடுகளை சேர்ந்த, 10 வல்லுநர்களுடன் எத்தியோப்பதி கலந்து ஆலோசித்தது.

இதன்போது ‘எத்தியோப்பியா கட்டவுள்ள அணையால் நைல் நதியின் நீரோட்டம் குறையாது என வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே புதிய அணை கட்டும் திட்டத்தை யாரும் தடுக்கமுடியாது,’ என எத்தியோப்பிய பிரதமர் ஹெய்லிமரியம் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE