Home » » செல்லிடத் தொலைபேசியை சார்ஜ் செய்யும் காற்சட்டை

செல்லிடத் தொலைபேசியை சார்ஜ் செய்யும் காற்சட்டை

Written By EGK NEWS on Friday, June 14, 2013 | 6:19 PM

காற்சட்டையின் மூலம் செல்லிடத் தொலைபேசிகளை ‘சார்ஜ்’ செய்வதற்காக தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரிட்டனின் சௌத்ஹம்டன் பல்கலைக்கழகமும் வொடாபோன் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய விசேட டெனிம் காற்சட்டையை அணிந்து கொண்டு நடக்கும் போது ஏற்படும் சக்தியினால் செல்லிடத் தொலைபேசிகள் சார்ஜ் செய்யப்படுமாம். இதற்கு ‘பவர் ஷோர்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த காற்சட்டையானது ரெஜிபோர்ம் போன்ற தன்மையுள்ள பதார்த்தங்களைக் கொண்டுள்ளது. அதை அணிந்துகொண்டு நடக்கும்போது ஏற்படும் மாற்றங்களால் மின்சக்தி உற்பத்தி செய்யப்படும்.

காற்சட்டைக்குள் பொருத்தப்பட்டிருக்கும் ‘கெனக்டர்’ எனும் இணைப்பான் மூலம் செல்லிடத் தொலைபேசியை சார்ஜ் செய்வதற்கு இம்மின்சக்தியை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது ‘பீஸோ எலெக்ரிசிட்டி’ என அழைக்கப்படுகிறது. அழுத்தத்தின் மூலம் ஏற்படும் மின்சக்தி என்பது இதன் அர்த்தமாகும்.

அதேவேளை குளிரான காநிலையில் உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்லீப்பிங் பேக் எனும் உறங்கல் பையொன்றின் மூலம் செல்லிடத் தொலைபேசிக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டமும் ஆராயப்படுகிறது.

இதில் மனித உடல் வெப்பத்தை பயன்படுத்தி மின்சக்தி தயாரிக்கப்படுகிறது. இது பைரோ எலெக்ரிசிட்டி என அழைக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE