வளிமண்டலவியல்
திணைக்களம் தவறிழைத்திருந்தால் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில்
அதனை பொறுப்பேற்கத் தயார் என இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர
தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தெளிவூட்டல் வழங்கப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டாலும் அது தொடர்பில் போதியளவு தெளிவு காணப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களம் சமர்ப்பிக்கும் அறிக்கைக்கு அமைய எவரேனும் தவறிழைந்திருந்தால் தண்டனை வழங்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் வௌ்ளத்தால் இடம்பெயர்ந்த 350 குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, பிரஜைகள் முன்னணியின் செயலாளர் ஜே.ஸ்ரீரங்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment