பம்பலப்பிட்டியிலுள்ள பிரயல்யமான வர்த்தக
கேந்திர நிலையத்தில் அமைந்துள்ள கணனி கடையொன்றை 16.06.13 ஞாயிற்றுக்கிழமை
சோதனையிட்ட குற்றவியல் புலனாய்வு பிரிவினர், அங்கிருந்த திருட்டு
மென்பொருட்கள் அடங்கிய இறுவெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து பொலிஸார் கருத்து
தெரிவிக்கையில், குறித்த கணனி விற்பனை நிலையத்தில் கணனி உதிரிப்பாகங்கள்
மற்றும் அனுமதியற்ற மென்பொருட்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்துள்ளதாக
தெரிவித்தனர்.
திருட்டு மென்பொருட்களை விற்பனை செய்தமை
மற்றும் வர்த்தகர்களின் அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களை மீறியதற்காக
குறித்த கணனி விற்பனை நிலையத்தில் பொருட்கள் நீதிமன்றில்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.
இதுகுறித்து சட்டத்தரணி ஒருவர் கருத்து
தெரிவிக்கையில், இலங்கையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் மென்பொருட்களை
சட்டவிரோதமாக திருட்டுத்தனமாக பயன்படுத்தினால், குற்றவியல் நடைமுறைச்
சட்டத்தின்படி 5 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 6 மாதகால சிறைத்தண்டனையோ
அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம் என தெரிவித்தார்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ்-7
இயங்குதளம் மென்பொருள் இலங்கையில் 21,750 ரூபா தொடக்கம் 31,550 ரூபா வரை
விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால், அனேகமானோர் இதை சட்டவிரோதமாக இலவசமாக
பயன்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment