Home » » இலங்கை இரண்டாகப் பிளவுபட்டு தனிநாடொன்று உருவாகும் நிலை! - பொது எதிர்க்கட்சிகள் அரசுக்கு எச்சரிக்கை!

இலங்கை இரண்டாகப் பிளவுபட்டு தனிநாடொன்று உருவாகும் நிலை! - பொது எதிர்க்கட்சிகள் அரசுக்கு எச்சரிக்கை!

Written By EGK NEWS on Monday, June 17, 2013 | 5:20 PM

என்றுமில்லாதவாறு இலங்கையில் இனவாதமும் மதவாதமும் இப்போது தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளன. இந்த நிலை தொடருமாயின் இன்னும் இரு தசாப்தங்களுக்குள் உலக நாடுகளின் தலையீட்டால் இலங்கை இரண்டாகப் பிளவுபட்டு தனிநாடொன்று உருவாகும் என்று பொது எதிர்க்கட்சிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. கொழும்பு, ராஜகிரியவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க பணிமனையில் 16.06.13 அன்று இடம் பெற்ற பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே மௌபிம மக்கள் கட்சியின் உப செயலாளர் சமரவீர வீரவன்னி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
"தற்போதே நாட்டில் இன, மத வாதங்கள் அதிகமாகத் தலை தூக்கியுள்ளன. இதனால்தான் உலக நாடுகள் பலவும் இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. ஒரு நாட்டிலுள்ள இரு இனங்களுக்கிடையில் பிரச்சினை தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டிருக்குமானால், அந்த நாடு உலக நாடுகளின் தலையீட்டால் இரண்டாகப் பிரிந்து தனிநாடு உருவாவதை கடந்த காலங்களில் கண்டிருக்கிறோம்.
இலங்கையும் அதுபோலவே இரண்டாகப் பிரிக்கப்படும் அபாயத்தை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இன்னும் இரு தசாப்தங்களில் உலக நாடுகளின் தலையீட்டுடன், இலங்கை இரண்டாகப் பிளவுபடும் அபாயம் ஏற்படலாம். எனவே அரசு இன, மத ரீதியிலான பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட முன்வர வேண்டும் என்றார் அவர்.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE