பொதுநலவாய
நாடுகளின் தலைவர்களது கூட்டத்தை இலங்கையில் நடத்துவது குறித்து மீண்டும்
ஆராயவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி கோரியுள்ளது. நாடாளுமன்ற
உறுப்பினர் மங்கள சமரவீர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். வடக்கு
மாகாணசபைத் தேர்தல் உட்பட்ட விடயங்களில் அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே அதனை கருத்திற் கொண்டு பொதுநலவாய
நாடுகளின் மதிப்பை காக்கும் வகையில் இலங்கையில் அதனை நடத்துவதை
மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 17 வது அரசியல்அமைப்பு திருத்தத்தை அமுல்செய்து நீதியான தேர்தலை
நடத்த முன்வர வேண்டும் என்று மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment