Home » , » நாமெல்லாம் சீன காலனித்துவ மக்களாகிறோம் - திஸ்ஸ அதநாயக்க

நாமெல்லாம் சீன காலனித்துவ மக்களாகிறோம் - திஸ்ஸ அதநாயக்க

Written By EGK NEWS on Tuesday, June 4, 2013 | 6:58 PM

இலங்கை மக்களாகிய நாம் சீன காலனித்துவத்தின் கீழ் உள்ள மக்களாக மாறி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

அரசாங்கம் பாரிய பிரச்சினையில் சிக்கியுள்ளது. அப்படியிருக்கையில் சீனா மீண்டும் இலங்கைக்கு கடன் வழங்க முன்வந்துள்ளதாக ஜனாதிபதி அண்மையில் அறிவித்தார்.

சர்வதேச நிறுவனங்கள் இலங்கைக்கு இப்போது நிவாரண கடன் உதவிகளை வழங்குவதில்லை. அதற்கு காரணம் அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றுவதும் மனித உரிமை மீறல்களை புரிவதுமாகும்.

சீன வங்கியில் கடன் பெறுவது இரு நாடுகளுக்கும் தொடர்புடைய விடயமல்ல. அது வேறு தரப்புடன் வைத்துக் கொள்ளும் உறவாகும். சீன வங்கி கடன் வழங்க காரணம் ஏதாவது திட்டத்திற்கு நிபந்தனை விதிக்கவாகும். சீன எக்டிம் வங்கியிடம் இலங்கை அண்மையில் அதிக கடன் வாங்கியுள்ளது.

நுரைச்சோலை அனல் மின்நிலைய கட்டுமான பணிகளை நிறைவு செய்து கொள்ள முடியாத அரசாங்கம், சீன வங்கியிடம் உதவி கோரியது. அந்தக் கடனை திரும்பிச் செலுத்த காலதாமதமானதால் நுரைச்சோலை திட்டத்தை தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவர சீனா யோசனை கூறியுள்ளது. இவ்வாறு அனைத்து தேவைகளுக்கும் நிபந்தனையில் கீழ் அரசாங்கம் சீனாவிடம் செல்கிறது. இதனால் இலங்கை குடிமக்கள் அனைவரும் சீனாவின் அடிமைகளாகும் அபாயம் தோன்றியுள்ளது.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE