Home » , , » மின்சார கட்டண அதிகரிப்பு எதிரான மனு தள்ளுபடி

மின்சார கட்டண அதிகரிப்பு எதிரான மனு தள்ளுபடி

Written By EGK NEWS on Tuesday, June 18, 2013 | 7:46 PM

புதிய மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்த மனு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான சந்தியா ஹெட்டிகே மற்றும் பி.ஏ.ரத்னாயக்க ஆகியோரின் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்போதே மனு மீதான விசாரணையை தொடர்ந்து முன்னெடுக்கமுடியாது என்று சுட்டிக்காட்டிய நீதியரசர்கள் குழு மனுவை தள்ளுபடி செய்தனர்.
உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரமே மின்சார கட்டணங்களில் அதிகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சட்டமா அதிபர்  உயர்நீதிமன்றத்தில் மே மாதம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
மின்சார கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் 2008 ஆம் ஆண்டு வழக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்த அதிகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் நீதிமன்றம் அன்று தெரிவித்திருந்தது.
சட்டமா அதிபரின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி நெரின் புள்ளேயே இவ்வாறு நீதிமன்றத்தின் கவனத்திற்கு அன்று கொண்டுவந்தார்.
இந்த மனு உயர்நீமன்றத்தில் ஆராயப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி நெரின் புள்ளே, மின்சார சபை சட்டமூலம் திருத்தப்பட்டதன் பின்னர் மின்கட்டணங்களை திருத்துவதற்கான முழுமையான அதிகாரம் பொதுமக்கள் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கே இருக்கின்றது என்று சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து இந்த அடிப்படை உரிமைமீறல் மனுமீதான விசாரணை ஜுன் மாதம்  19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்னிலையிலேயே மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE