Home » » இலங்கை அரசியல் யாப்பின் 18 திருத்தங்களும் ஒரே பார்வையில்

இலங்கை அரசியல் யாப்பின் 18 திருத்தங்களும் ஒரே பார்வையில்

Written By EGK NEWS on Tuesday, June 18, 2013 | 8:01 PM

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் என்பது 1978 செப்டெம்பர் 7 ஆம் திகதி தேசிய அரசுப் பேரவை விடுத்த அறிவிப்பை அடுத்து இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் ஆகும்.
இது இலங்கைக் குடியரசின் இரண்டாவதும், 1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் நடைமுறையில் இருக்கும் மூன்றாவது அரசியலமைப்புச் சட்டமும் ஆகும்.
1977 ஜுலை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததையடுத்து 1972 அரசியலமைப்புச் சட்டத்தில் இரண்டாவது திருத்தம் 1977 ஒக்டோபர் 4 ஆம் திகதி கொண்டு வரப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் (ஜனாதிபதி ஆட்சி) முறை அமுல் படுத்தப்பட்டது.
அப்போது பிரதமராக இருந்த ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா 1978 பெப்ரவரி 4 ஆம் திகதி அரச தலைவரானார்.
1977 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்புச் சட்டம் இயற்ற ஐக்கிய தேசியக் கட்சி மக்களிடம் ஆணை கேட்டிருந்தது. இதன் பிரகாரம் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி அமைத்ததும் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்ற தெரிவுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
1978 செப்டெம்பர் 7 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட புதிய அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்ற பேரவை முறைமையையும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் பதவியையும் அங்கீகரித்தது.
அரசுத்தலைவர், மற்றும் நாடாளுமன்றத்துக்கான காலம் ஆறு ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்களில் பல்லுறுப்பினர் கொண்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி, நாடாளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த எண்ணிக்கை 14 ஆவது திருத்தச் சட்டத்தில் 225 ஆக அதிகரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அரசியலமைப்பு, 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் 18 தடவைகள் திருத்தப்பட்டுள்ளதுடன் 2013 ஆம் ஆண்டு 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜாதிக ஹெல உறுமயவினால் 21 ஆவது திருத்தத்திற்கான தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE