Home » , , » 80வருட பழமை வாய்ந்த கொள்ளுப்பிட்டி ஸ்ரீ பூமாரி அம்மன் ஆலயத்தை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோத்தபாய உத்தரவு!

80வருட பழமை வாய்ந்த கொள்ளுப்பிட்டி ஸ்ரீ பூமாரி அம்மன் ஆலயத்தை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோத்தபாய உத்தரவு!

Written By EGK NEWS on Sunday, June 9, 2013 | 11:00 PM

கொழும்பு, கொள்ளுப்பிட்டி தர்மாலோக மாவத்தையின் முடிவில், அலரி மாளிகைக்குப் பின்புறமாக உள்ள 80வருட கால பழமை வாய்ந்த ஸ்ரீ பூமாரி அம்மன் கோவிலை வேறு இடத்துக்கு மாற்றுமாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். 1920களில் இந்தப் பகுதியில், கொழும்பு மாநகரசபையினால், கொள்ளுப்பிட்டி பௌத்த விகாரைக்குப் பின்பாக, குடியமர்த்தப்பட்ட சலவைத் தொழிலாளர் சமூகத்தினரின் வழிபாட்டுக்காக 1930களில், இந்தக் கோவில் அமைக்கப்பட்டது. மூன்று தல விருட்சங்களைக் கொண்டு 80 ஆண்டுகளாக இயங்கும் இந்தக் கோவில் கொள்ளுப்பிட்டிப் பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. பல இடங்களில் இருந்து பக்தர்கள் இங்கு வழிபாட்டுக்காக வருகின்றனர்.
  
இந்தநிலையிலேயே கொழும்பு மாநகரசபை இந்தக் கோவிலை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபையே இதற்கான உத்தரவை வழங்கியுள்ளது. இந்தக் கோவில் அமைந்துள்ள இடத்தில் கொழும்பு மாநகரசபை வாகனத் தரிப்பிடம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது. இந்தக் கோவிலை அமைக்க வழங்கப்பட்டுள்ள மாற்று இடம் நவம் மாவத்தையில் அமைந்துள்ளது. இது சலவையகப் பகுதி என்றும் அது கோவில் அமைப்பதற்குப் பொருத்தமான இடம் இல்லை என்றும கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் ருக்சன் பெரேரா தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE