Tuesday, June 18, 2013

ஈராக்கில் தற்கொலைத் தாக்குதல்; 15 பேர் பலி

ஈராக்கில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 30 பேர்  காயமடைந்துள்ளனர்.

ஈராக் தலைநகரான பக்தாத்திலுள்ள கிழக்கு அல் - கைஹிரா மாவட்டத்திலுள்ள ஷியா பிரிவினரின் பள்ளிவாசலொன்றிலேயே இத்தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இப்பள்ளிவாசலினுள் நுழைந்த தற்கொலைதாரி தன்னைத்தானே வெடிக்க வைத்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment