Home » , » 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தால் ஏற்படும் அழுத்தங்கள் தொடர்பில் இந்தியா ஆராயும்

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தால் ஏற்படும் அழுத்தங்கள் தொடர்பில் இந்தியா ஆராயும்

Written By EGK NEWS on Tuesday, June 18, 2013 | 7:09 PM

இலங்கையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களினால் ஏற்படக்கூடிய அழுத்தங்கள் தொடர்பில் தமது நாடு ஆராய்ந்து வருவதாக இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்தியப் பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதால் 1987ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஜே.ஆர் - ராஜிவ் ஒப்பந்தம் மீறப்படுவதாகத் தெரிவித்து அண்மையில் மு.கருணாநிதி, பிரதமருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், இந்த விடயத்தினை கலாநிதி மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் ஊடாக ஏற்படக்கூடிய அழுத்தங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு தமது கருத்துக்களை முன்வைப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் இந்தியப் பிரதமரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE