இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வீசா அவசியமற்ற முறைமை ஒன்றை
அமுலாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
இலங்கையும் இந்தியாவும் நீண்ட நாள் நட்பு நாடுகளாக உள்ள நிலையில், இரண்டு
நாடுகளுக்கும் இடையில் பயணிக்கும் போது வீசா அவசியப்பாடு அற்ற நிலை ஒன்றை
உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா
தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தைகள் விரைவில்
ஆரம்பிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு
நாட்டின் நட்புறவினையும் மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடிவதுடன்,
சுற்றுலாத்துறையையும் அபிவிருத்தி செய்துக்கொள்ள முடியும் என்று
எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment