ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (26-05-2013) இரவு சீனாவிற்கான விஜயம்
ஒன்றை மேற்கொண்டுள்ளார். சீன ஜனாதிபதி சீ ஜிங்பிங்கின் அழைப்பை ஏற்று,
ஜனாதிபதி மஹிந்த சீனாவிற்கான விஜயத்தை மேற்கொள்வதாக ஜனாதிபதி ஊடக பிரிவு
தெரிவித்துள்ளது. இதன்போது சீன ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை
ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம், பொருளாதாரம், கலாசாரம் மற்றும் தொழில்நுட்பத் துறை தொடர்புபட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் நாளை மறுதினம் 29ஆம் திகதி இடம்பெறவுள்ள மாநாட்டிலும் - ஆசிய அரசியல் கட்சி மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.

0 comments:
Post a Comment