Home » » இந்தியா இலங்கையை எதிர்த்தால் சீனாவும் பச்சைக்கொடி காட்டும் - விக்கிரமபாகு கருணாரத்ண!

இந்தியா இலங்கையை எதிர்த்தால் சீனாவும் பச்சைக்கொடி காட்டும் - விக்கிரமபாகு கருணாரத்ண!

Written By EGK NEWS on Friday, May 31, 2013 | 8:36 PM

ஜனாதிபதி மஹிந்த அடிக்கடி சீனாவுக்கு ஓடுவதால் சீனா இலங்கைக்குச் சார்பாகவே செயற்படுமென கருதிவிடக்கூடாது. ஏனேனில் இலங்கையை இந்தியா துணிவுடன் எதிர்க்குமானால் அதற்கு சீனாவும் நிச்சயம் பச்சைக்கொடி காட்டும் என்று நவசமாஜக் கட்சி தெரிவித்துள்ளது. அதேவேளை வடக்குத் தேர்தலின் போது நீதி நியாயம் ஜனநாயகம் ஆகியவற்றைப் படுகொலை செய்வதற்கு மஹிந்த அரசு திட்டம் தீட்டி வருகின்றது என்றும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அரசமைப்பின் 13ஆவது திருத்தம் வடமாகாணசபைத் தேர்தல் ஆகியன் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே நவசமஜக்கட்சியின் பொதுச் செயலாளரும் தெஹிவளை - கல்கிசை மாநகரசபையின் உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரெட்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
  
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக அமைச்சர்களையும், அமைப்புக்களையும், தூண்டிவிட்டு ஜனாதிபதி மஹிந்த அரசியல் ஆட்டம் ஆடுகின்றார். 13ஜ ஒழிப்பதற்கு மஹிந்த அரசு துடிக்கையில் மானம் கெட்ட மன்மோகன் அரசு மெளனம் காத்து வருகின்றது. இலங்கை சீனாவின் பக்கம் முழுமையாக சாய்ந்து விடும் என்ற அச்சத்தில் தெற்காசியாவின் வல்லரசான இந்தியா இலங்கையிடம் பணிந்து செல்லுகின்றது. இந்தியா இலங்கையை எதிர்க்காததால்தான் சீனா கூட இலங்கைக்கு ஆதரவு வழங்குகின்றது. இந்தியா துணிவுடன் முதுகெழும்புடன் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு சீனாவும் நிச்சயம் ஒத்துழைப்பு வழங்கும். என்பதை டில்லி உணரவேண்டும்.
இலங்கையை விட சீனாவுக்கும் இந்தியாவும், இந்தியாவுக்கு சீனாவும் முக்கியம் பெறுகின்றது. இருநாடுகளுக்கிடையில் பல உதவிகள் இருக்கின்றது. அதேவேளை வடக்குத் தேர்தல் நடைபெறுவது உறுதியானாலும், அதற்கு முன்னர் அரசு செய்யவேண்டிய காரியங்களைக கச்சிதமாக செய்துமுடித்துவிடும். எனவே வடக்குத் தேர்தல் நீதியாகவும், நியாயமானதாகவும் நடைபெறுமா என்பது சந்தேகமாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE