Home » , » பேசுவதற்கு குறைவான நேரம் கொடுப்பதால் முதல்வர்கள் மாநாட்டுக்கு நான் வரவில்லை : தமிழக முதல்வர் ஜெயலலிதா

பேசுவதற்கு குறைவான நேரம் கொடுப்பதால் முதல்வர்கள் மாநாட்டுக்கு நான் வரவில்லை : தமிழக முதல்வர் ஜெயலலிதா

Written By EGK NEWS on Tuesday, June 4, 2013 | 7:12 PM

சென்னை:

மத்திய அரசின் நிர்வாகத்தில் நாங்களும் சமபங்கு கூட்டாளிகளாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.இம்மாநாட்டில் நடத்தப்படும் விவாதங்களில் எங்களுடைய  பங்கும் நிறைவாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இங்கு உள்ளது. அப்போதுதான் மாநிலங்களின் உண்மையான நிலையை மத்திய அரசுக்கு எங்க ளால் எடுத்துரைக்க இயலும். மேலும், இது ஒரு கலந்தாய்வு கூட்டமாக இல்லாமல், மாநில முதல்வர்கள் தங்களுடைய கருத்துக்களை கூறுவதற்கு குறைவான  நேரமே வழங்கப்பட்டு வருகிறது.  மத்திய அரசு முன்பே தீர்மானித்த சில நடவடிக்கைகளை மாநிலங்களின் முதல்வர்கள் ஆராயாமல் ஏற்பதற்காக இந்த  மாநாடு கூட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும், ஆராயாமல் முன்னதாக உண்மையென முதல்வர்களை ஏற்றுக்கொள்ளச்செய்வதுடன் அவர்கள் மெத்தனமாக  நடத்தப்படுவதும் 27.12. 2012 அன்று நடைபெற்ற தேசிய வளர்ச்சி குழு கூட்டத்திலிருந்து தெரிய வருகிறது.அந்த கூட்டத்தின்போது, அவமதிக்கும் வகையில்  மணியடித்து, கால அளவை காரணம் காட்டி எனது உரையை பாதியிலேயே முடிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டேன். முதல்வர்கள் 10 நிமிடங்களுக்குள் உரை  களை முடித்துவிட்டு அவற்றை அவையில் வெறுமனே முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்கு பதிலாக, எனது சார்பில் மாநாட்டில்  கலந்து கொள்வதற்கு மாநில அமைச்சரவையின் மூத்த அமைச்சர் கே.பி. முனுசாமி, உள்துறை செய லாளர், டிஜிபி ஆகியோரை அனுப்பி வைக்கிறேன். ஆய்வு  குறிப்புக்களில் பட்டியலிடப்பட்ட அனைத்து விவகாரங்கள் மீதான தமிழகத்தின் விரிவான கருத்துக்களை எனது உரை எடுத்துரைக்கும். மாநாட்டில் எனது  உரையை அமைச்சர் வாசிப்பார்.இவ்வாறு ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:உள்நாட்டு பாதுகாப்பு குறித்த  முதல்வர்கள் மாநாடு பிரதமர் தலைமையில் இன்று நடைபெறுவதாகவும், அதில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழ் மத்திய உள்துறை அமைச்சரிடம் இருந்து  எனக்கு வந்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் ஐயம் இல்லை. இது மாநிலத்தின் சட்டம்&ஒழுங்கை  பராமரிக்கும் மாநில அரசுகளின் தலையாய பணி தொடர்பானதாகும்.இருப்பினும், மத்திய அரசால் நடத்தப்படும் இந்த மாநாடு ஒரு சடங்கு போல நடந்து வரு கிறது. மாநாட்டில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் ஆய்வு குறிப்புகள் குறித்து, மாநில முதல்வர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்கு மிகமிக  குறைவான கால அவகாசம், வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இது எனது அனுபவத்தில் கண்டதாகும். தற்போது நடக்கவிருக்கும் இந்த மாநாட்டிலும் 12 விவகாரங்கள்  அடங்கிய மிக நீண்ட முக்கிய ஆய்வு குறிப்புகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.இதற்கான தலைப்புகள் பற்றி தெரிவிக்கவே குறைந்தது 10  நிமிடங்களாவது பிடிக்கும். துரதிர்ஷ்டவசமாக மாநில முதல்வர்கள் அவர்களுடைய கருத்துக்களை முன்வைப்பதற்கும் இதே கால அவகாசம்தான் அளிக்கப்படுகிறது.  மாநில அரசுகளின் முதல்வர்கள் மக்களால் மக்களாட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற நிலையில்,

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE