ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட பிரான்ஸில் வாழ்வதாக
ஆளும் கட்சி எம்.பி அருந்திக பெர்ணான்டோ மீண்டும் பாராளுமன்றத்தில்
உறுதியாகத் தெரிவித்தார்.
அவர் உயிருடன் வாழ்ந்தால் அவரை தம்மிடம்
சேர்ப்பதற்கு அரசாங்கமும் அருந்திக பெர்ணான்டோ எம்.பியும் தலையிட்டு உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என எக்னலிகொடவின் மனைவி சந்திரா எக்னலிகொட
ஊடகங்கள் மூலமும், இணையத்தளங்கள் மூலமும் வேண்டுகோள் விடுப்பதாகவும்
அருந்திக பெர்ணான்டோ எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேவேளை எக்னலிகொட பிரான்சில் இருப்பதாக நாம் இரண்டு தினங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் வெளியிட்ட தகவலையடுத்து தற்போது தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களும் இணையத் தளங்களும் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அருந்திக பெர்ணான்டோ எம்.பி இதனால் தமது பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும், இது விடயத்தில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றிய அருந்திக பெர்ணான்டோ எம்.பி மேலும் தெரிவித்ததாவது,
நான் பிரான்ஸ் சென்றபோது அங்கு ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்தனவைச் சந்தித்தேன். அவரே பிரதீப் எக்னலிகொடவை எனக்குக் காண்பித்துள்ளதுடன் பிரான்சில் உள்ள பலரும் அவர் அங்கு வாழ்வதாக என்னிடம் தெரிவித்தனர்.
அத்துடன் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் சுனந்த தேசப்பிரிய போன்ற வர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும் பிரதீப் எக்னலிகொட இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment