பலப்பிட்டியவில்
வைத்து எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வாகன தொடரணி மீது
மேற்கொள்ளப்பட்டபட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகர்
தலைமையிலான விசேட குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. அண்மையில்
ஏற்பட்ட சூறாவளி மற்றும் சீரற்ற காலநிலைக் காரணமாக உயிரிழந்த மீனவர்களின்
குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில்
விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பலப்பிட்டியவிற்கு விஜயம்
மேற்கொண்டார்.
இதன்போது, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அரசாங்க
ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலில் காயங்களேதுமின்றி எதிர்க் கட்சித் தலைவர்
தப்பித்துகொண்டாலும் அவர் பயணித்த வாகனம் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
பலப்பிட்டிய பிரதேச சபையின் தலைவரே இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கியதாக
கூறப்படுகிறது. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு
செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment