Home » , » ஜீ.பி.எஸ்.தொழில்நுட்பம் நீதிமன்றில்அறிமுகம்!

ஜீ.பி.எஸ்.தொழில்நுட்பம் நீதிமன்றில்அறிமுகம்!

Written By EGK NEWS on Tuesday, June 18, 2013 | 7:34 PM

முறைப்பாட்டாளரால் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியை உறுதி செய்வத ற்காக இலங்கை நீதிமன்ற வர லாற்றில் முதன் முறையாக ஜீ. பி. எஸ். தொழில்நுட்ப த்தைப் பயன்படுத்த சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கைக்கும்- இந்தியாவுக்கும் இடையில் கடல் எல்லையை நிர்ணயித்து- உறுதி செய்து- சமர்ப்பிப்பதற்காக தியத்தலாவ வரைபட நிறுவன முக்கியஸ்தர் பிரதி நில அளவையாளர்நாயகம் எஸ். டீ. பீ. ஜே. தாம்பேகம நாளை 20ஆம் திகதி ஜீ.பி.எஸ். தொழில் நுட்பத்தைப் பாவித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சிய மளிப்பார்.

ஹெரோயின் வைத்திருந்தமை- இறக்குமதி செய்தமை- வியாபாரம் செய்தமை ஆகிய மூன்று குற்றச் சாட்டுக்களின் பேரில் ஐந்து இந்திய பிரஜைகளுக்கும்- மூன்று இலங்கை பிரஜைகளுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இவ்வாறு முதன்முறையாக ஜீ. பி. எஸ். தொழில் நுட்பம் கடல் எல்லையை நிர்ணயித்து அடையாளம் காண்பதற்காகவும் பயன்படுத்தப்படும்.

குற்றம் சுமத்தப்பட்டோர் கைது செய்யப்படும் போது அவர்கள் கடலில் இருந்த இடத்தைச் சரியாக அடையாளம் காண ஜீ. பி. எஸ். தொழில்நுட்பத்தை பாவிக்க அரச சிரேஷ்ட சட்டத்தரணி மாதவ தென்னகோன் விடுத்த கோரிக்கைக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன அனுமதி வழங்கினார்.

2011 நவம்பர் 28 ஆம் திகதி இந்திய றோலர் படகிலிருந்தவர்கள் சிங்கி படகிலிருந்த இலங்கையர்களுக்கு 955.04 கிராம் நிறையுடனான ஹெரோயின் பார்சல்களை கைமாற் றும் போது கடற்படையினரால் கைதாகினர்.

அவ்வேளை ஜீ.பி.எஸ். தொழில் நுட்ப உபகரணங்களும் கைப்பற்ற பட்டன. இவர்கள் கைதாகும் போது இந்திய கடற்பரப்பிலா? அல்லது இலங்கை கடற் பரப்பில் இருந்தனர்? என்ற பிரச்சினைக்கு பதிலளிக்கும் வகையில் அரச சிரேஷ்ட வழக்குரைஞர் தென்னக் கோன் ஜீ. பி. எஸ். தொழில்நுட்ப முறையின் ஊடாகப் பெற்ற செய்திப் புகைப்படங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும்.

நீதிமன்றத்தில் வீடியோ புரஜக் டரும் திரை ஒன்றும் பொருத்தப் படும். இதற்கும் நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

உள்ளூர் நீர்ப்பரப்பில் இவர்கள் கைதானதாகக் கடற்படை லெப்டின ன்ட் சரித்த குணவர்தனவும்- மாலுமி சமித் சானக்கவும் தெரிவித்தனர்.

இந்திய நீர்ப்பரப்பில் கைதாகி இலங்கை நீர்ப்பரப்புக்கு கொண்டு வரப்பட்ட இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர சட்டத்தரணிகள் யோசனை தெரிவித்தனர்.

கைதான போது படகுகளில் பயன்படுத்தப்பட்ட ஜீ. பி. எஸ். தொழில்நுட்ப உபகரணங்க ளில் பதியப்பட்டுள்ள புகைப் படங்களை சமர்ப்பிக்க விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டதால் சாட் சியை உறுதிப்படுத்த இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தத் தீர்மா னிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE