Home » » மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரத்தை ரத்து செய்ய அரசு நடவடிக்கை!

மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரத்தை ரத்து செய்ய அரசு நடவடிக்கை!

Written By EGK NEWS on Thursday, June 6, 2013 | 5:46 PM

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் சில யோசனைத் திட்டங்களை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட சில யோசனைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் சகல அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
  
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலம் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யோசனை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தலைவர் என்ற ரீதியில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காமையே, தீர்வுத் திட்டத்தை காண்பதில் தாமதமடைவதற்கான காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE