Home » , » இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டாம்: பிரித்தானியாவிற்கு ஐ.நா பரிந்துரை!

இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டாம்: பிரித்தானியாவிற்கு ஐ.நா பரிந்துரை!

Written By EGK NEWS on Sunday, June 2, 2013 | 8:46 AM

பிரித்தானியாவிலிருந்து, இலங்கைப் புகலிடக்கோரிக்கையாளாகள் நாடு கடத்தப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையர்களை நாடு கடத்தும் பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான முறையில் நாடுத்தப்படுகின்றார்களா?
அவ்வாறு நாடு கடத்தப்படுவதன் மூலம் உள்நாட்டில் அவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கினார்களா என்பது குறித்து பிரித்தானிய விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 12 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
  
இலங்கைப் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் அமைப்பு, பிரித்தானிய அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதன் மூலம் பிரித்தானியா ஐக்கிய நாடுகள் பிரடகனத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE