அக்கரைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் 280ற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் சாத்வீகப் போராட்டதில் ஈடுட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரவில் சுனாமியால்
பாதிக்கப்பட்ட மக்களே இந்த சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஆழிப்பேரலையால் வாழ்விடங்களை இழந்த தமக்காக சவுதி அரசாங்கம்
நிர்மாணித்துக்கொடுத்துள்ள வீட்டுத் திட்டத்தில் குடியேற அனுமதிக்குமாறு
இந்த சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் பல தடவைகள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் உரிய தீர்வு வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment