Home » , » சவூதி அரசால் கட்டி முடிக்கப்பட்ட 500 வீடுகளினதும் கவலைக்குரிய தோற்றம் -படங்கள் இணைப்பு

சவூதி அரசால் கட்டி முடிக்கப்பட்ட 500 வீடுகளினதும் கவலைக்குரிய தோற்றம் -படங்கள் இணைப்பு

Written By EGK NEWS on Tuesday, June 18, 2013 | 8:13 PM


(எம்.பைஷல் இஸ்மாயில்)

கடந்த சுனாமியினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்கென வழங்குவதற்காக சவுதி அரசாங்கத்தினால் கட்டிமுடிக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை பாதிக்கப்பட்ட மக்களிடம் இதுவரையில் கொடுக்கப்படாமல் பல வருடங்கலாக இழுபறி நிலையில் உள்ள வீடுகளை திருடர்களும், கட்டாக்காலிகளும் ஆட்சி செய்து வருகின்றன.
இவ்வீட்டுத்திட்டத்தை யாருமே கவனிப்பாரற்று இருந்து வருவதனால் அந்த வீடுகள் யாவும் ஒரு அடர்ந்த காட்டுக்குள் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டமாக காட்சியளிக்கின்றன. சவுதி அரசாங்கம் இந்த வீடுகளை முழுமையாக கட்டிமுடித்து அரசாங்கத்திடம் கையளித்தும் கூட இதுவரை காலமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளிக்காமையினால் தற்போது அங்குள்ள வீடுகளில் உள்ள கதவுகள், யன்னல்கள், ஓடுகள் என்பன திருடர்களால் கழவாடப்பட்டு வருவதை காணக்கூடிய வகையில் அமைந்து காணப்படுகின்றன.
இவ்வாறு கதவுகள், யன்னல்கள், ஓடுகள் போன்றன திருடர்களால்; திருடிச் செல்லப்பட்ட பல வீடுகளில் கட்டாக்காலிகளின் அமைவிடமாகவும் காணப்படுகின்றது. இந்த வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளிப்பதாக இருந்தால் அங்குள்ள வீடுகள் யாவும் மீண்டும் திருத்தியமைக்கட்டுத்தான் வழங்கி வைக்கவேண்டும்.
இந்நிலைமையில் காணப்படுகின்ற வீடுகளைக் கோரியே பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்கள் பல தடவைகள் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வந்தனர். இதனை கொடுக்க மறுக்கும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் செயலானது அம்மக்களின் விசனத்தை தூண்டும் ஒரு செயலாகவே இருக்கின்றது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இந்த வீடுகளை ஓரிரு வருடங்களுக்குள் கொடுக்கத் தவறும் பட்சத்தில் அங்கு அமைந்துள்ள வீட்டின் சுவர்களையும், நிலத்தையும் தான் பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளிக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்படலாம். அங்குள்ள வீடுகளின் தளபாடங்கள் நாளாந்தம் திருடர்களின் செயற்பாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
எனவே இந்த வீட்டுத்திட்டம் தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஒரு நல்ல முடிவினை எடுத்து பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களிடம் கையளிப்பாரேயானால் ஓரளவு திருடர்களினால் திருடப்பட்டது போக மீதமாகவுள்ள பாதி வீட்டையாவது அந்த மக்கள் பெற்றுக்கொள்வார்கள். இல்லை என்றால் அங்குள்ள வீடுகளின் தளபாடங்கள் யாவும் திருடர்களினால் திருடப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டின் சுவரையும் நிலத்தையும் தான் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் கையளிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளன. 

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE