நாட்டில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி
காலநிலை காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்ந்து
24 மணிநேரத்துக்கு நிலவலாம் என காலநிலை அவதான நிலையம்
அறிவித்துள்ளது.அத்துடன் இன்று ஏற்பட்ட சீரற்ற கால நிலை காரணமாக இதுவரையில்
5பேர் இறந்துள்ளதுடன் 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ
மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
நேற்றைய தினம் ஏற்பட்ட இந்த சீரற்ற காலநிலையால் தொழிலுக்காக கடலிற்கு சென்ற 20 படகுகள்
விபத்துக்குள்ளாகியுள்ளது.அதில் இருந்தவர்களில் இதுவரை 17 பேர் காணாமல் போயுள்ளதுடன் 5பேர் கடலில் இருந்து
மரணமான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
தற்போது மீட்பு பணிகளில் கடல் மற்றும் விமானப்படையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மீட்பு பணியில் ஈடுபடும் இராணுவ கெலிகப்டர்
கரை ஒதுங்கிய படகும்...மீட்பு பணியில் ஈடுபடும் மக்களும்
0 comments:
Post a Comment