13வது
அரசியல் அமைப்புத் திருத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில்
அமைச்சரவையில் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் தொடர்பாக பேசுவதில்லை என
அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கடுமையாக
எதிர்ப்பதாக அதன் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இது
முக்கியமான சந்தர்ப்பம் அரசாங்கம் பாரதூரமான முடிவை எடுக்க நினைக்கின்றது.
அதிகாரத்தை பரவலாக்க அரசாங்கம் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தில்
மாற்றங்களை கொண்டு வர இணங்கியுள்ளமை பாரிய வெற்றி. எனினும் 13வது அரசியல்
அமைப்புத் திருத்தத்தில் உள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களில்
மாற்றம் ஏற்படுத்தாததை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த மாகாண சபை முறையானது இந்தியாவினால் இலங்கைக்கு பொருத்தப்பட்ட
மரண பொறி. காவற்துறை அதிகாரங்கள் மூலம் வடக்கு மாகாணத்திற்கு தனியான
காவற்துறை தலைவர் ஒருவரை அவர்களால் நியமித்து கொள்ள முடியும். இதனை
காவற்துறை ஆணைக்குழுவின் மூலமே அவர்கள் செய்ய வேண்டும். அத்துடன் காணி
அதிகாரங்கள் மூலம் இராணுவ முகாம்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்குரிய
இடங்களில் பல்வேறு திட்டங்களுக்காக காணிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
பாதுகாப்பு தரப்பினர் அந்த இடங்களில் இருந்து வெளியேறாது போனால் மக்கள்
போராட்டங்கள் வெடிக்கக் கூடும். இது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும்.
பாதுகாப்பு தரப்பினர் பொதுமக்களுடன் மோதலுக்கு சென்றால் சர்வதேசம் அதில்
தலையிடும். இதற்கு காரணம் அரசியல் அமைப்பில் உள்ளதை மக்கள் கோருகின்றனர்
என்பதாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாத அமைப்பு என்பதை நாம் அனைவரும்
அறிவோம். அவர்களில் இறுதியான நோக்கம் ஈழம் என அவர்கள் தெரிவித்து
வருகின்றனர். மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
வெற்றிப்பெற்றால், அவர்கள் அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை
பெற முயற்சிப்பர் என்பது நிச்சயம். அதிகாரங்கள் வழங்கப்படாது போனால்
அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று அதனை பெற்றுக்கொள்வர். அதுதான தனித் தமிழ்
நாட்டுக்காக அடித்தளமாக அமையும் எனவும் குணதாச அமரசேகர மேலும்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment