Home » » 13வது சட்டத் திருத்த பிரேரணைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கும்!- ரவூப் ஹக்கீம்

13வது சட்டத் திருத்த பிரேரணைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கும்!- ரவூப் ஹக்கீம்

Written By EGK NEWS on Thursday, June 6, 2013 | 5:36 PM

13வது சட்டத்திருத்தத்தின் சில நன்மையான அம்சங்களை முழுமையாக இல்லாமல் செய்வதற்கான ஒரு வழியாகவே இதை தாங்கள் பார்க்கிறோம் என்றும், இந்த முயற்சியை அரசு திணிக்க முயன்றால், அதை சிறுபான்மைக் கட்சிகள் தொடர்ந்து எதிர்க்கும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்  ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை அரசு 13வது சட்டத்திருத்தத்தின் சில பிரிவுகளைத் திருத்த முயற்சிப்பது குறித்த பிரேரணைகளைப் பற்றி ஆலோசித்து முடிவெடுக்க ஒருவார கால அவகாசம் கேட்டிருப்பதாக இலங்கை நீதித்துறை அமைச்சரான ஹக்கீம் தெரிவித்தார்.
ஆளும் கூட்டணியின் கட்சிகளின் கூட்டம் இது குறித்து கலந்தாலோசிக்க கடந்த செவ்வாய்க்கிழமையன்று கூட்டப்பட்ட போது, தான் நாட்டில் இல்லை, ஆனால் இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவிருப்பதாகத் தெரிந்த பின்னர், தனது பாலத்தீனப் பயணத்தை ரத்து செய்து இலங்கை விரைந்ததாகத் தமிழோசையிடம் தெரிவித்தார் ரவூப் ஹக்கீம்.
இந்த பிரேரணைகளை பொதுவாக சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதகமாக இருப்பதாக தாங்கள் பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்ட போது தனது கட்சிக்கு இது குறித்து ஆலோசித்து முடிவு செய்ய அவகாசம் வேண்டுமென்று தானும், அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கேட்டுக்கொண்ட்தற்கிணங்க ஒரு வார கால அவகாசம் தர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முடிவு செய்த்தாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அரசு சார்பில் இரு மாகாணங்கள் விரும்பினால் அதை அனுமதிக்கும் சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கும், மாகாண சபைகளுக்கு சட்டவாக்கல் குறித்த அதிகாரங்களைத் தரும் 154 ஜி என்ற பிரிவின் கீழ் தரப்பட்ட அதிகாரங்களில் பெரும்பான்மை மாகாணங்கள் விரும்பினால், அதிகாரங்களை ரத்து செய்வதற்கும் பிரேரணைகள் முன்வைக்கபட்ட்தாக ரவூப் ஹக்கிம் உறுதிப்படுத்தினார்.
13வது சட்டத்திருத்தத்தின் சில நன்மையான அம்சங்களை முழுமையாக இல்லாமல் செய்வதற்கான ஒரு வழியாகவே இதை தாங்கள் பார்க்கிறோம் என்றார் ஹக்கீம்.
இந்த முயற்சியை அரசு திணிக்க முயன்றால், அதை சிறுபான்மைக் கட்சிகள் தொடர்ந்து எதிர்க்கும் என்றார் ஹக்கீம்.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE