Wednesday, June 19, 2013

13 பிளஸ் எனக்கூறியது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வையே : இந்தியாவிற்கு இலங்கை புது விளக்கம்!

"13 + என நாம் சொன்னது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான தீர்வு" இதுவும் மகிந்த சிந்தனையின் ஒரு துளி இலங்கையின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் மிகவும் விரிவுப்படுத்தப்பட்ட பொதுவான தீர்வையை 13 பிளஸ் என இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு அறிவித்திருந்தாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு புதிய விளக்கம் அளித்துள்ளது. அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் ஊடாக இலங்கை அரசாங்கம் இதனை இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. 13வது அரசியல் அமைப்புத் திருத்தமானது அரசியல் கட்சிகளின் உரிய இணக்கங்கள் இன்றியே ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  
இந்த அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி மாத்திரமல்லாது, ஜே.வி.பியும் அன்று நிராகித்திருந்தது என இலங்கையின் விசேட பிரதிநிதி இந்தியாவிடம் கூறியுள்ளார். எது எப்படி இருந்த போதிலும் இரண்டு நாடுகளுக்கிடையில் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின் அந்த உடன்படிக்கையுடன் தொடர்புடைய நாட்டுடன் கலந்துரையாட வேண்டும் என்பது சர்வதேச இணக்கங்களில் ஒன்று என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment