Home » » மஹிந்தவின் அரசை கவிழ்க்க சூழ்ச்சி தேவையில்லை - ரணில் விக்ரம சிங்ஹ!

மஹிந்தவின் அரசை கவிழ்க்க சூழ்ச்சி தேவையில்லை - ரணில் விக்ரம சிங்ஹ!

Written By EGK NEWS on Wednesday, May 22, 2013 | 7:24 PM

இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் செய்யத் தேவையில்லை எனவும் வாக்கு பலத்தின் ஊடாக அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பெண் தூதுவர் ஒருவரை சந்தித்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானதென ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
ஜேர்மன் உதவி கிடைக்கும் 'பெட்ரிக் நியூமான் பவுன்டேசன்' என்ற அமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தும் கருத்தரங்கை அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சி என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால் அதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இன்று (22) பாராளுமன்றில் தெரிவித்தார்.
  
இந்த கருத்தரங்கு இணைப்பாளர் சாகரிகா தெல்கொடவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடாத்தியுள்ளதாகவும் எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிலைக்கு ஆளாகலாம் எனவும் எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இது பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதத்தை மீறும் செயல் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். தான் உள்ளிட்ட எதிர்கட்சிகள் 2014ம் ஆண்டு தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளத் தயார் எனவும் அதற்கு கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் அவசியம் எனவும் எதிர்கட்சித் தலைவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE